Breaking News

தமிழ் எனும் தேன்

ஆயிரம் பிறவி புண்ணியத்தின் பலனாய் தமிழ்த்தாயின் இளைய மகனாய் பிறந்தேன். தமிழனாய் பிறந்ததே சிறப்பு.
தமிழெனும் தெல்லமுது, திகட்டாத தேனமுது நமக்கு பற்பல வாழ்வியல் சிந்தனைகளை அளித்துள்ளது, அவற்றில் சிலவற்றை பகிர ஆசை.

 

===============================================

நீ செல்லமாட்டாய் என்றால் என்னிடம் கூறு, சென்று வெகு சீக்கிரம் வந்துவிடுவேன் என்பதை எல்லாம் நீ வரும் வரை உயிரோடு இருப்பவர்களிடம் போய் சொல் என்று கூறுவது போல உள்ள குறள். காதலை இவ்வளவு அழகாக வேறு யாராலும் காட்ட முடியாது… 

திருக்குறள் – திருவள்ளுவர்

குறள் பால்: காமத்துப்பால். குறள் இயல்: கற்பியல். அதிகாரம்: பிரிவாற்றாமை.

குறள் 1151:
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

===============================================

 வரவுக்கு மேல் செலவு செய்வதால் வரும் தீமைகள் 

ஆன முதலில் அதிகம் செலவானால்
மான மழிந்து மதிகெட்டு – போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு

“நல்வழி” என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது…

==================================================

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *