Breaking News

பெண் எனும் பெரும்பேய்

காதல் பேசி காமம் தீர்க்கும் பெண்னே…
எப்படியும் பிரிப்பார்கள் என்றே சேர்ந்தாயோ?

மாதங்கள் பத்தல்ல, வருடங்கள் பல
கருவாய் சுமந்த நம் காதலை கருக்கலைப்பு செய்தாய்…

உன் இடத்தில் நானிருந்தால்
என் உயிரையும் உனக்காய் கொடுத்திருப்பேன்…

எனக்காய் போராட வேண்டாம்…
நமக்காய் ஓர் வார்த்தையேனும் பேசியிருக்கலாம்…

தேவைக்காக சேர்த்தாயோ – இல்லை
தேகத்திற்காய் சேர்ந்தாயோ?
காதல் என்று சொல்லாதே – உன்
உளமே சிரிக்கும் உனைப்பார்த்தே…

முதலிரவு முன் முன்னூறு இரவு ஒத்திகை…
மணமேடையில் எப்படி வருகுது புன்னகை?

காமம் நாய்களுக்கும் பொருந்தும், தவிர்க்க.
எப்படி துணிந்தாய் நம் காதலையும் மறைக்க?

நாயினும் கீழாய் கீழ்நரகத்திலும் இடமின்றி அலைவாய்…
போதாது இவை…
ஆயிரம் பிறவி, என் போல் ஆணாய் பிறப்பாய்…

என்று முடிக்கும்முன்னே,
என்ன இருந்தாலும் என் நனி
நன்றாக இருக்கட்டுமென்றே,
நினைக்கிறது பித்தன் மனம்.

முட்டாள் பெண்னே, நினைவில்கொள்.
நீ ஏமாற்றியது என்னை அல்ல – உன்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *