Breaking News

கிறுக்கல்கள்

Shakthi

படுக்கை

March 28, 2020

முத்தச் சத்தம் ஒன்றே போதும் யுத்தம் ஒன்றே வேண்டாம் பெண்ணே நித்தம் நித்தம் உந்தன் காலில் மணியாய் ஆட சித்தம் வேண்டும் பட்டு மெத்தை வேண்டாம் பெண்ணே பாறாங்கல்லாய் போனதின்று எட்டுத் திக்கும் இருந்த போதும் உன் இடையில் தானே துயில வேண்டும் -அன்புடன் சக்தி

Read More

எதை கேட்க?

February 27, 2020

ஆயிரம் காட்சிகள் தந்த இறைவா காண இரு கண்களும் கொடுத்தாய் கொட்டிவைத்த அழகெல்லாம் இறைவா எட்டிப்பார்க்க ஓர் வாழ்வையே கொடுத்தாய் இட்டு இட்டு வைத்த மலையெல்லாம் இறைவாஎட்டி எட்டி வர ஈர் கால்களும் கொடுத்தாய் இவ்வளவும் கொடுத்தாயே இறைவாஇனியும் எதை கேட்பேன் உனைநான் ? -அன்புடன் சக்தி –

Read More

என் உயிர்க்காதலி

September 27, 2018

என் உயிர்க்காதலி என்னோடு சேர்த்தான் உனக்கு எத்தனை ஆசை… ஓர் நாள் ஈர் நாள் அல்ல – நிழலாய் ஒவ்வொரு நாளும் என்னை பின் தொடர்கிறாய்… உன்னை எண்ணிப்பார்க்காத என்னை எண்ணி நாட்களை எண்ணிக் கொண்டுருக்கிறாய்… என்றேனும் ஓர் நாள் வருவேனென உந்தன் நினைவில் நான். என்னை உயிரெனச் சொன்ன மங்கை ஆறாம் விரலாய் அறுத்தெறிந்தாள் தெரிந்தே தொலைத்தாள் என்னை…! மரணம் எனும் என்னுயிர்க் காதலியே இப்போதே கட்டித்தழுவி உன்னுடன் சேரத்தான் ஆசை. ஆனால், இறப்பில்லா என்னை […]

Read More

அவளும் நானும்

August 9, 2018

கானல்நீர் நீ கானகப் பறவை நான். தொடுவானம் நீ தொட்டு விட என்னும் சிறுவன் நான். துரத்திக்கொன்டே இருக்கிறேன். தொலைதூரம் சென்றுகொண்டே இருக்கிறாய்…!!                                                                             […]

Read More

விண்ணைத் தாண்டி

July 22, 2018

காதலியை பிரிந்து வாடும் காதலனுக்காக தடைகள் பல தாண்டி அவனிடம் வந்து சேர்ந்த காதலியை பார்த்து காதலன் சொல்வது… விண்ணைத் தாண்டி வந்ததென்ன வெண்ணிலாவே உன் விழியிலே நீர் எதற்கு வெண்ணிலாவே கண்முன்னே வந்த பின்னும் வெண்ணிலாவே – என் கவலையை போக்காயோ வெண்ணிலாவே முகத்திலே வாட்டமென்ன வெண்ணிலாவே – நம் முந்தை நாள் நிணைத்தாயோ வெண்ணிலாவே உனக்கென நானிருப்பேன் வெண்ணிலாவே கலங்காமல் தோள் சாய்வாய் வெண்ணிலாவே இத்துணை காலம் எங்கிருந்தாய் வெண்ணிலாவே இப்போதேனும் வந்தாயே வெண்ணிலாவே… […]

Read More

கலர் கனவுகள்

June 9, 2018

அர்த்தமில்லா உன் வரிகளுக்காக… ஆர்வவமுடம் காத்திருக்குறேன் நான்…   ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆனாலும் இப்படியே இருப்பேன்,  உன்னை பிடிக்கும் என்ற ஓர் வரி வரும் வரை….     உன் ஒற்றை வரி குறுஞ்செய்தி கண்டு உளமகிழும் மனதை என்செய்வேன்… அம்முவிற்கு ஆடை எடுக்கையில் உனக்கும் சேர்த்து யோசிக்கும் என் கலர் கனவுகளை என்செய்வேன்… கரையாய் நீ இருக்க, அலையாய் நான் இருப்பேன்…                   […]

Read More

கன்னித்தமிழ்

June 9, 2018

உலகில் நீரின்றி போனாலும்… நின் நிணைவின்றி போகாது…!!! நிலவென்று சொல்வேனோ? பால் வண்ணம் வெல்கிறது கடலென்று சொல்வேனோ? கரையிலா காதல் வெல்கிறது.. மாமலையென்று சொல்வேனோ? சேயென காக்கும் மனம் வெல்கிறது பொன்னென்று சொல்வேனோ? கற்ப்பின் தரமங்கு வெல்கிறது. மலைத்தேனென்று சொல்வேனோ? இதழ் அமுதம் வெல்கிறது எதுகை மோனை எட்டவில்லை ஒப்பிட்டுக்காட்ட ஏதுமில்லை… எதை சொல்வேன் உவமையென? ஒன்றுமில்லை கன்னித்தமிழை தவிர… – அன்புடன் சக்தி

Read More

கண்ணீர்

June 9, 2018

தூங்காத கண்கள் கொண்டு துணை தேடும் நெஞ்சம் உண்டு மாறாத காதல் இன்று தடம்மாறி போனதென்று நீர் காணா என் கண்கள் நிரம்பி வழியுது அவள் நினைவுகளாய்… -அன்புடன் சக்தி

Read More

உன் முகம் காண

June 9, 2018

இரு கை முறித்து… தடந்தோள் உடைத்து… நீளக்கால் வெட்டி… வரிசை பல் தட்டி… அழகு முகம் பெயர்த்து…. ஓராயிரம் வேல் கொண்டு எரிந்தாலும்… கூர் வாளால் துளைத்தாலும்….. சங்கிலியால் பிணைத்தாலும்…. உடைத்தெறிந்து வருவேன்… கடைசி மூச்சின் துணை கொண்டு… தவழ்ந்தேனும் உன்  முகம் காண…                                               […]

Read More

சுகம்

June 9, 2018

உனக்காய் இருந்தால் ஒரு சுகம்… உனக்காக இறந்தால் ஒரு சுகம்…. உன்னோடு இருந்தால் ஒரு சுகம்… உன்னுள் இருந்தால் ஒரு சுகம்… உன்னை இழந்தால் வெறும் சவம்… -அன்புடன் சக்தி

Read More